isaifm

12/31/2012

உணர்வற்ற பிணம்

மூச்சுக்கு  மூச்சு  அவர்களையே  நினைத்து  இருந்தேன்
எப்பொழுது  அவர்கள் என்னை பார்த்து
உன் தந்தைக்கு எத்தனை தாரம்  என்று கேட்டார்களோ 
அன்றே என் மூச்சு  நின்று விட்டது   
இப்பொழுது  உணர்வற்ற  வெறும்  பிணம்  தான் நான்
 இனி  அதில்  இருந்து உயிர்த்
தெழுவது கடினம் தானே ?

12/05/2012

தெரு நாய்

தெரு  நாய் வீடு வீடாக  அலைவது போல 
நானும் அலைகிறேன்  அன்பை தேடி 
தெரு நாயை  துரத்துவது போல
என்னையும் துரத்துகின்றனர்  எல்லோரும்

பாவி

அனுதாபபட்டவது  யாரும் இனி
என் மேல அன்பு வைக்கதீர்கள் 
செய்த பாவத்திற்கும்
செய்த துரோகத்திற்கும் 
நான் அனுபவித்தே  ஆகா  வேண்டும்

12/04/2012

என் வலி

மிகப் பெரிய வலிகளை
கண்டிராதவர்களால் மட்டும் தான்,
பிறரின் வலியில் இன்பம் காண முடிகிறது.

பொய் முகங்கள்

விளையாட்டுக்காக  சினுங்கவைக்கபடும் 
தொட்டச்சினுங்கி போல 
நானும் சினுங்க வைக்கப்படுகிறேன்
பலரால்

11/14/2012

துளி அன்பிற்க்காக

விளையாடி அலுத்து போன பொம்மையாய்
தூக்கி எறியப்படும் மனங்கள்,
ஏங்கி கிடக்கின்றன,
ஒரு துளி அன்பிற்க்காக

11/10/2012

அன்புக்கு அடிமை

அன்புக்கு  அடிமையாகின்றவர்களை 
உங்கள்  திமிருக்கு அடிமையாக்க நினைகாதீர்கள் 
இதன் விளைவு  அவர்களின்  அன்பை  மட்டும் இல்லை 
அவர்களையே  நீங்கள் இழக்க கூடும்

9/29/2012

ரணங்கள்

வார்த்தைகள்  ரணமாய்  சுட்டெரிக்கும்  போது
கண்ணீரை  தான்  காணிக்கை  ஆக்க முடிகிறது
வேறு என்ன  செய்ய  முடியும்  :(

3/26/2012

நிரந்தரம் இல்லை

உனது அன்பு நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும்
தினம் தினம் உன்மீது கொண்ட அன்பு
அதிகமாகி கொண்டே செல்கிறது

by .prasa

3/22/2012

என் வேதனை

என்ன வேதனை என்ன சோதனை
இந்த வேளையில்.....
சொல்லத் தெரியல சொந்தம் புரியல...!
இது விதியா? அல்ல இறைவன் சதியா? 

சோகம்

சோகத்தை சுமையாக நினைத்து வாழ்பவர்களும்இந்த பூமியில் வாழ்கிறார்கள் அதேபோல்சோகத்தை சிரிப்பினால் மறைத்திட்டு வாழும் உள்ளங்களும்அதே இடத்திலனே உயிர் வாழ்கிறார்கள் 

1/27/2012

நான் மட்டும்

நான் மட்டும் மறுக்கபடுகிறேன் , மறைக்கபடுகிறேன், மறக்கபடுகிறேன் ..!!

1/14/2012

மறந்துவிடாதே

தெரிந்தே உன்னை காயப்படுத்துகிறேன்
என்னை நீ மன்னிக்க வேண்டாம்
உன் மரணம் வரை மறக்காதே 
அது போதும்

1/13/2012

நேசம் என்னும் வேஷம்

முடிவற்ற நினைவுகள்
முடியாமல் நான் !!!

கவனிக்காத பார்வைகள்
கவனிக்க தவறாமல் நான் !!

அர்த்தமில்லா செய்கைகள்
மிரட்சியுடன் நான் !!!

முடிவில்லா பிதற்றல்கள்
முடிக்க திறனற்று நான் !!

மொத்தத்தில்
இடமறிந்து நேசம் கொள் !!
என்றது மனம்
(coper frm somone prfil)

1/02/2012

paadi alaithen itho unnai

என் சோகம்

வார்த்தையால் உன் மனதை  காயப்படுத்தி விட்டு
கண்ணீரால்  என்  கன்னத்தை   கழுவுகிறேன் 
மற்றவர் சோகம் புரிவதில்லை
புரிந்து கொண்டால் துன்பம் இல்
லை;((((